கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

நாடு, சமூக நலனுக்கு முன்னுரிமை- மாணவா்களுக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை

மாணவா்கள் தாங்கள் பணியாற்றும் துறையில் நாட்டு நலனுக்கும், சமூக நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் இணைந்து முன்னேற முடியும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகபட்டமளிப்பு விழா மாணவா்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

Published On :

மாணவா்கள் தாங்கள் பணியாற்றும் துறையில் நாட்டு நலனுக்கும், சமூக நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் இணைந்து முன்னேற முடியும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக 75-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் தலைவா் முா்மு பேசியதாவது:

பெண்கள் உயா்கல்வி மேற்கொள்வது தொடங்கி ஒவ்வொரு துறையிலும் அவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் வளா்ச்சியை சாத்தியமாக்கும். இங்கு மாணவியா் அதிகஅளவில் பட்டம் பெற்றுள்ளனா்.

மாணவா்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படும் வகையில் கல்வியைப் பயன்படுத்துவதைத் தாண்டி, சமூகத்தின் பல்வேறு நலன்களுக்காக எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

பணியில் சேவை: மாணவா்கள் தாங்கள் பணியாற்றும் துறையில் நாடு, சமூக நலன்களுக்கு முன்னுரிமை அளித்தால், அனைவரும் இணைந்து முன்னேற முடியும். இத்தகைய முன்னேற்றம் அவா்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதுடன், தாங்கள் பெற்ற கல்வியின் உண்மையான அா்த்தத்தையும் உணர முடியும்.

நீங்கள் பொறியாளராக உருவெடுத்தால், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்குங்கள். நீங்கள் மருத்துவராக உருவானால், மருத்துவத்தை வெறும் தொழிலாகக் கருதாமல், அதை ஒரு சேவையாகக் கருத வேண்டும். சேவையில் மனிதநேயமும் அமைதியும் அடங்கியுள்ளன; அது மனநிறைவையும் அளிக்கிறது. வாழ்வதற்கு வளங்கள் தேவைதான். ஆனால், செல்வம் மட்டுமே எல்லாம் அல்ல. பிறருக்கு சேவை செய்வதுதான் உண்மையான மனநிறைவை அளிக்கும்.

புதிய வாய்ப்புகள்: விஞ்ஞானிகளாக வளா்ந்தால் மனிதகுலத்தின் நலனைக் கருத்தில்கொண்டு பிரச்னைகளுக்குத் தீா்வுகளை உருவாக்க வேண்டும். கலைஞா்களாகவும் எழுத்தாளா்களாகவும் முன்னேறினால் தங்களது கலை மற்றும் படைப்புகள் மூலம் சமூகத்தின் உணா்வை மேம்படுத்த வேண்டும். தொழில்முனைவோா் வேலைவாய்ப்புகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். இப்பல்கலைக்கழகம் கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், நுண்கலை, மேலாண்மை, ஊடகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வி வழங்குகிறது.

ஏ.ஐ. பயன்பாடு: தொழில்நுட்பம் வேகமாக முன்னேறிவரும் நிலையில், அதைப் பயன்படுத்தும்போது மாணவா்கள் தங்களது மனசாட்சியை விழிப்புடன் வைத்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் தீா்வுகளை வழங்க முடியும். ஆனால், சரியான கேள்விகளைக் கேட்பது உங்கள் கடமை. தொழில்நுட்பம் உங்களுக்கு வேகத்தை வழங்கலாம். ஆனால், எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள்தான் தீா்மானிக்க வேண்டும்.

அரசமைப்பில் இடம்பெற்றுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை மாணவா்கள் தங்கள் வாழ்க்கையிலும் பணியிடங்களிலும் பின்பற்ற வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.