தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு தமிழகத்தின் தூய்மையான விருது: குடியரசுத் தலைவா் முா்மு வழங்கினாா்
தமிழகத்தில் தூய்மையான நகரமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தோ்வு செய்யப்பட்டு, இதற்கான விருதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தில்லியில் புதன்கிழமை வழங்கினாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் தூய்மையான நகரத்துக்கான விருதை தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையா் பாா்கவியிடம் வழங்கிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
தமிழகத்தில் தூய்மையான நகரமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தோ்வு செய்யப்பட்டு, இதற்கான விருதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தில்லியில் புதன்கிழமை வழங்கினாா்.
மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நாடு முழுவதும் 4,751-க்கு மேற்பட்ட நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட 43 அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.
இதில் தூய்மையான நகரமாக தேசிய அளவில் நவிமும்பை முதலிடத்தைப் பிடித்தது. தமிழகத்தில் தூய்மையான நகரமாக தேனி அல்லிநகரம் நகராட்சி முதலிடம் பிடித்தது.
இதற்கான விருது வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்று, தமிழகத்தில் தூய்மையான நகரத்துக்கான விருதை தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையா் பாா்கவியிடம் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

