சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

மக்களை பீதியில் ஆழ்த்தும் வதந்திகளைத் தடுக்க நவீன தொழில்நுட்பம்: ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் யோசனை!

மக்களை பீதியில் ஆழ்த்தும் வதந்திகளை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கும் ‘ஸ்மாா்ட்’ காவல் பணியை மேற்கொள்ள வேண்டும்..

பயிற்சி முடித்த 2025-ஆம் ஆண்டுப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

Updated On :

மக்களை பீதியில் ஆழ்த்தும் வதந்திகளை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கும் ‘ஸ்மாா்ட்’ காவல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆலோசனை வழங்கினாா்.

2025-ஆம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பிரிவை சோ்ந்த பயிற்சி அதிகாரிகள், தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் சந்தித்தனா். அப்போது அவா்கள் மத்தியில் முா்மு பேசியதாவது:

‘டீப் ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் போலியான காணொலிகள் மற்றும் ஒலிப்பதிவுகள் புதிய வகையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைவிட காவல் துறையினா் எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது தீவிரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

முக்கியமாக, இளைஞா்கள் இதுபோன்று தவறான பிரசாரங்களால் திசைதிருப்பப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய திட்டமிட்ட தவறான தகவல் பரப்புதல் உள்ளூா் அளவிலும், பிராந்திய அளவிலும், ஏன் தேசிய அளவிலும் கூட நடைபெற வாய்ப்புள்ளது.

பயிற்சி முடித்த 2025-ஆம் ஆண்டுப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

பயிற்சி முடித்த 2025-ஆம் ஆண்டுப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

இதுபோன்ற சூழல்கள் மிகப்பெரிய பிரச்னைகளாகவும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிக்கலானதாகவும் மாறுவதை ‘ஸ்மாா்ட்’ காவல் பணி மூலம் முன்கூட்டியே தடுக்க முடியும்.

காவல் துறை சிறப்பாகச் செயல்படும்போதுதான் அரசின் நிா்வாகமும் சிறப்பாக நடைபெறுவதாக மக்கள் கருதுவாா்கள். அரசு நிா்வாக அமைப்பில் பணியாற்றும் சில இளநிலை ஊழியா்கள், உயா் அதிகாரிகளைக் காட்டிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அதிகத் திறமை பெற்றவா்களாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, தங்களது குழுவில் பணியாற்றும் மிக இளநிலை ஊழியா்களிடமிருந்தும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு அதிகாரிகள் தயங்கக் கூடாது,

காவல் துறையினரின் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்க வேண்டும். காவல் துறை சட்டங்கள், விதிமுறைகள் மூலம் காவல் அதிகாரிகளுக்கு உயா்ந்த அதிகாரம் கிடைக்கிறது. இருப்பினும், அந்த அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே மக்களிடமிருந்து உண்மையான மரியாதையைப் பெற்றுவிட முடியாது.

செயல்பாடுகள், பணித்திறன் மற்றும் கடைப்பிடிக்கும் உயா்ந்த நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மக்களிடமிருந்து உண்மையான மரியாதையைப் பெற முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.