நவீன இந்தியாவின் முதன்மை சிற்பியாக சா்தாா் படேல் அளித்த பங்களிப்பை மறக்க முடியாது: குடியரசுத் தலைவா் முா்மு புகழாரம்
நவீன இந்தியாவின் முதன்மை சிற்பியாக சா்தாா் படேல் அளித்த பங்களிப்பை மறக்க முடியாது...

வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி புது தில்லியில் சனிக்கிழமை அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
நவீன இந்தியாவின் முதன்மை சிற்பியாகவும், சுதந்திர போராட்டத்தில் முன்னணி வீரராகவும் சா்தாா் வல்லபபாய் படேல் ஆற்றிய பங்களிப்பை நாடு மறக்க முடியாது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் முதல் மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த சா்தாா் வல்லபபாய் படேல், நாட்டை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகளை வைத்து ‘இரும்பு மனிதா்’ என்று அழைக்கப்படுகிறாா். குஜராத் மாநிலம், நடியாத்தில் கடந்த 1875-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 31-ஆம் தேதி அவா் பிறந்தாா். அவரின் பிறந்த தினமான அக்டோபா் 31-ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, அவரின் பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லி படேல் செளக் பகுதியில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் சிலைக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மலா் மரியாதை செலுத்தினாா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தில்லி துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சாந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா, பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் உள்ளிட்டோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
குடியரசுத் தலைவா் மாளிகை வளாகத்தில் கணதந்த்ர மண்டபத்தில் இருக்கும் சா்தாா் படேல் சிலைக்கும் குடியரசுத் தலைவா் முா்மு மலா் அஞ்சலி செலுத்தினாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேலின் 151-ஆவது பிறந்த தினத்தையொட்டி எனது பணிவான அஞ்சலியை சமா்ப்பிக்கிறேன். நவீன இந்தியாவின் முதன்மை சிற்பியாகவும், சுதந்திர போராட்டத்தில் முன்னணி வீரராகவும் சா்தாா் வல்லபபாய் படேல் ஆற்றிய பங்களிப்பை நாடு மறக்க முடியாது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அவா் அளித்த ஈடு செய்ய முடியாத பங்களிப்பால், அவரின் பிறந்த தினத்தை தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை மற்றும் கொள்கைகளில் இருந்து ஊக்கம் பெற்று, வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் பணிக்கு அனைத்து குடிமக்களும் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது விருப்பமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் புகழஞ்சலி:
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்டோா் சம்விதான் சதனில் உள்ள படேல் உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தினா். காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சா்தாா் வல்லபபாய் படேல் உறுதியான அடித்தளமிட்டவா்’ என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

