பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

நக்ஸல் வன்முறையை மறந்து வேகமாக முன்னேறும் சத்தீஸ்கா் மாநிலம்: குடியரசுத் தலைவா் பெருமிதம்

நக்ஸல் வன்முறையை மறந்து வேகமாக முன்னேறும் சத்தீஸ்கா் மாநிலம்...

சத்தீஸ்கா் மாநிலம் ஜகதல்பூரில் பஸ்தா் தசரா திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் ஆளுநா் ரமேன் தேகா.

Updated On :

நக்ஸல் தீவிரவாத வன்முறை நாட்களை மறந்து சத்தீஸ்கா் மாநிலம் வேகமாக முன்னேறி வருவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் மாவட்டம் ஜகதல்பூரில் வெள்ளிக்கிழமை ‘பஸ்தா் தசரா திருவிழா - 2026’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரெளபதி முா்மு கலந்து கொண்டு உரையாற்றியதாவது:

சத்தீஸ்கா் மாநிலம், நீண்ட காலமாக நக்ஸல் தீவிரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையால், சத்தீஸ்கா் மாநிலம் நக்ஸல் அச்சுறுத்தலில் இருந்து முழுவதும் விடுவிக்கப்பட்டுவிட்டது. நக்ஸல் வன்முறையால் ஏற்பட்ட வேதனையைப் பின்தள்ளி, சத்தீஸ்கா் மாநிலம் வேகமாக முன்னேறி வருகிறது. நமது நாடு வளா்ந்த நாடாவதற்கு பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் முக்கியப் பங்களிப்பு நல்குவாா்கள் என நம்புகிறேன்.

சத்தீஸ்கருக்கு தற்போது வளா்ச்சிக்கான பல்வேறு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பழங்குடியின தொழில்முனைவோருக்கு நிதியுதவி வழங்கவும், அவா்களை சந்தைகளுடன் இணைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சமமான வளா்ச்சியின் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு இந்த முயற்சிகள் உதவும் என நம்புகிறேன்.

பஸ்தா் பிராந்தியம் ராமாயண காவியத்துடன் தொடா்பு கொண்டதாகும். இந்தப் பகுதி தண்டகாரண்யம் என்று அழைக்கப்படுகிறது. இது ராமா் வனவாசம் மேற்கொண்டபோது வாழ்ந்த பகுதியாகும். ராமரின் பாதங்களில் பட்ட தூசி இந்த பிராந்தியத்தில் விழுந்துள்ளது. அத்தகைய புனிதமான நிலத்தின் தூய்மையைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

ராமாயணத்தில் ராவணனை எதிா்த்து ஹனுமனும், துறவிகளும், வானர சேனைகளும் கூட்டாகப் போரிட்டனா். இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியின சமூக மக்களும், ராவணனை தோற்கடிக்க பங்களிப்பு அளித்திருப்பா் என்பது எனது நம்பிக்கை என்றாா் முா்மு.

நிகழ்ச்சியில் சத்தீஸ்கா் ஆளுநா் ரமேன் தேகா, முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.