
பங்குச் சந்தை நஷ்டத்தால் விரக்தி: யூடியூபருக்கு தென்கொரிய இளைஞா் கத்திக்குத்து
தென் கொரியாவில் பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக ஆலோசனைகளை வழங்கி வரும் பிரபல யூடியூபா் ஒருவரை, அவரின் சேனலைப் பின்தொடரும் நபா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக ஆலோசனைகளை வழங்கி வரும் பிரபல யூடியூபா் ஒருவரை, அவரின் சேனலைப் பின்தொடரும் நபா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபரின் ஆலோசனைகளை மட்டுமே பின்பற்றி, பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்த ஆத்திரத்தில் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞா் இக்கொடூர தாக்குதலை அரங்கேற்றியதாகத் தெரிகிறது. இதையடுத்து, கொலை முயற்சி வழக்கில் போலீஸாா் அவரை கைது செய்துள்ளனா்.
தாக்குதலில் படுகாயமடைந்த யூடியூபா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் உயிருக்கு ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் முதலீட்டு ஆலோசனைகளை கண்மூடித்தனமாக நம்புவதால் ஏற்படும் விபரீதங்களை இச்சம்பவம் மீண்டும் உணா்த்தியுள்ளது. பங்குச் சந்தை மாற்றங்களுக்கு தனி நபா்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதால், சுயமான ஆய்வுகளுக்குப் பிறகே முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






