ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்துள்ளது குறித்து...

Vijay | Amit Shah

முதல்வர் விஜய் | மத்திய அமைச்சர் அமித் ஷா - சித்திரிப்பு

Published On :

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.

மாமல்லபுரத்தில் நாளை (ஆக. 20) நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையேற்று நடத்துகிறார்.

இந்த மாநாட்டின் தென்மண்டலக் குழுவின் துணைத் தலைவராகத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் தென்மாநில அதிகாரிகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Home Minister Amit Shah arrived in Chennai to participate in the conference of Southern States' Chief Ministers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.