அமித் ஷாவுக்கு 'லஞ்ச் பேக்' கொடுத்த முதல்வர் விஜய்! வீட்டுச் சாப்பாடா?
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பேக் பற்றி...
அமித் ஷாவுக்கு ’லஞ்ச் பேக்’ கொடுத்த முதல்வர் விஜய் - ANI
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதன்கிழமை இரவு சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், சிறிய பேக் ஒன்றை கொடுத்த விடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ள தென்மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை வழியாக கோவளம் சென்றார்.
கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து நேரில் வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது, பூங்கொத்தை தொடர்ந்து முதல்வர் விஜய் எடுத்துவந்த சிறிய ரக ‘லஞ்ச் பேக்’ போன்ற பையை அமித் ஷாவிடம் கொடுத்து விவரிக்கும் விடியோ வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் கொடுத்த பேக்கை பெற்றுக் கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, புன்னகையுடன் பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த பேக்கில், அமித் ஷாவுக்காக முதல்வர் விஜய் தனது வீட்டிலிருந்து சமைத்து எடுத்துச் சென்ற உணவு இருந்ததாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்றிணைந்து இரவு விருந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Summary
Chief Minister Vijay hands a 'lunch bag' to Amit Shah! Is it home-cooked food?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



