
கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி!
கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலியாகியிருப்பது பற்றி....

பலி - பிரதிப் படம்
கனடாவில் விமானப் பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலியானதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பலியாகினர்.
இவர்களின் மறைவுக்கு வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய துணைத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், இந்தக் கடினமான நேரத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்தம் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகக் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்துத் தூதரக உதவிகளையும் வழங்க தயாராக உள்ளளோம்.
மறைந்த ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Two Indian students have been killed in a tragic air accident in Canada during their flight training, the Indian mission has said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








