கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்!

கனடாவில் இந்திய பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சிகளின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

இந்தியப் பெண் கொலை

இந்தியப் பெண் கொலை - file photo

Published On :

கனடாவில், இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் என்ற பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலில் கொலையாளி பேசியிருக்கிறார், பிறகுதான் சுட்டிக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை வெளியிட்டிருக்கிறது.

இந்த கொலைச் சம்பவத்தில், பிரம்டனைச் சேர்ந்த 37 வயது நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. கொலை செய்தவர் ஷரன்ஜித் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலைக்கு அடிப்படை காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று கூறப்படுகிறது.

கனடா நாட்டு நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 7.23 மணிக்கு, காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து நவ்நீத் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, ஆனாலும் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வீட்டுக்குள் கொலை நடக்கவில்லை, பொதுவிடத்தில்தான் நடந்திருக்கிறது. கொலையாளி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியிருக்கிறார். பிறகு நடத்தப்பட்ட விசாரணையில்தான் கொலையாளி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஒரு பெண் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் பின்னால் ஒரு நபர் சென்றார். சிறிது தூரம் போனதும் அந்தப் பெண்ணிடம் அவர் பேசினார். பிறகுதான் துப்பாக்கியால் சுட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கொலைக்கு பின்னணி என்ன என்பது தெளிவாக தெரியவரவில்லை. இது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் காவல்நிலையத்தில் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.