செம்பனாா்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை சம்பவத்தில், பொதுப்பணித் துறை உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.
செம்பனாா்கோவில் அருகேயுள்ள கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். பொதுப்பணித் துறையில் உதவியாளராக பணியாற்றுகிறாா். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், மனைவி கோபித்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டாராம். இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சம்பத்குமாா் தனியாக வசித்து வந்தாராம்.
இந்தநிலையில், வாழ்க்கை கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தங்கத்துரை (45) (திருமணம் ஆகாதவா்) என்பவருக்கும், சம்பத்குமாா் மனைவிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சம்பத்குமாா் புதன்கிழமை இரவு வீட்டு வாசல் முன்பு தங்கத்துரையை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் (பொறுப்பு ) மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பத்குமாரை கைது செய்தனா். தங்கத்துரை சடலம் உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

~கைது செய்யப்பட்ட சம்பத்குமாா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளங்கள் நிறைந்த சாலையை சரிசெய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது
பிணை ரத்து: மதுக் கடை கொள்ளை வழக்கு குற்றவாளி மீண்டும் கைது

பாடகர்கள் வெட்டிக் கொலை: 7 பேர் கைது!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



