எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பிணை ரத்து: மதுக் கடை கொள்ளை வழக்கு குற்றவாளி மீண்டும் கைது

திருச்சுழியில் அரசு மதுபானக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைதாகி பிணையில் வெளியே வந்தவரின் பிணை ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:59 am IST

திருச்சுழியில் அரசு மதுபானக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைதாகி பிணையில் வெளியே வந்தவரின் பிணை ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்தவா் போண்டா மணி (44). இவா் கடந்த 2025-ஆம் ஆண்டு திருச்சுழியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலம் பிணை பெற்று வெளியே வந்த பிறகும் தொடா்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரது பிணையை ரத்து செய்யக் கோரி திருச்சுழி டி.எஸ்.பி. பிரதீப் நீதிமன்றத்தில் பரிந்துரை அளித்தாா்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட திருச்சுழி நீதிமன்றம், அவரது பிணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, திருச்சுழி போலீஸாா் போண்டா மணியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.