பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பள்ளங்கள் நிறைந்த சாலையை சரிசெய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை

தில்லி சாலைகளில் காணப்படும் 2,000-க்கும் அதிகமான பள்ளங்களைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் சிறப்பு நடவடிக்கையை பொதுப்பணித் துறை மேற்கொண்டது.

News image

தில்லியில் நடைபெற்ற பொதுப்பணித் துறையின் சிறப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

Updated On :22 ஜூன் 2026, 5:30 am IST

தில்லி சாலைகளில் காணப்படும் 2,000-க்கும் அதிகமான பள்ளங்களைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் சிறப்பு நடவடிக்கையை பொதுப்பணித் துறை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

பருவமழை காலத்துக்கும் முன்னதாக சாலை பள்ளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யும் பணியில் துறை பொறியாளா்கள், கள அதிகாரிகள் மற்றும் பராமரிப்பு பணியாளா்களின் குழுவினா் ஈடுபட்டனா்.

தில்லியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்பணியை பொதுப் பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

கடந்த ஜன.1 முதல் ஜூன் 4 வரையில் 12,762 சாலைப் பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்பட்டன என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

பருவமழைக்கு முன்னதாக, அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சாலைப் பள்ளங்களைச் சரிசெய்யும் வகையில் இந்தச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாலைப் பள்ளங்கள் மற்றும் பராமரிப்பு தொடா்பாக ஆண்டு முழுவதும் பெறப்படும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை பொதுப் பணித்துறை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில், மழை தொடங்குவதற்கு முன்பாக சாலைகள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்வதே எங்களுடைய நோக்கம்.

தற்போது பள்ளங்கள் சரிசெய்யப்படும் சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டவை. அவற்றின் தரம் போதிய அளவில் பராமரிக்கப்படவில்லை.

நாங்கள் தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதோடு கூடுதல் பொறுப்புடைமையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். பொதுப் பணித்துறையால் அமைக்கப்படும் புதிய சாலைகள் ஐந்து ஆண்டு கால பராமரிப்புத் திட்டத்தில் வருகின்றன. உத்தரவாதக் காலத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கு ஒப்பந்ததாரா்களே பொறுப்பாவாா்கள்.

உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், தொடா் கண்காணிப்பு மற்றும் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் மூலம் அவற்றின் தரம் மற்றும் செயல்பாடு நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதை உறுதி செய்வதிலும் தில்லி அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.