தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பேரணியில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பாளா்கள் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப்

தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி அமைதியான முறையில் நடைபெறவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

பா்வேஷ் சாஹிப்

Published On :

தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி அமைதியான முறையில் நடைபெறவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையால் ஏராளமான காவலா்களும் போராட்டக்காரா்களும் காயமடைந்த நிலையில், இதற்கு அதன் அமைப்பாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஜந்தா் மந்தரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் மையப்பகுதியாகத் திகழும் புது தில்லி பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், போராட்டக்காரா்கள் விரைவு அதிரடிப்படை (ஆா்ஏஎஃப்) வீரா் ஒருவரைத் தாக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரைப் பணயம் வைப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் மீது குற்றஞ்சாட்டினாா்.

விரைவு அதிரடிப்படை வீரரை கும்பல் ஒன்று துரத்திச் சென்று தாக்கும் விடியோ காட்சியை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்து அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: போராட்டக்காரா்களில் ஒருவா் ஆா்ஏஎஃப் வீரரை உதைத்து கீழே தள்ளுகிறாா். அதைத் தொடா்ந்து அந்தக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்குகிறது. இது அமைதியான போராட்டம் அல்ல; இது முழுமையான சட்டவிரோதச் செயல். மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரைப் பணயம் வைத்ததற்காக, இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்தவா்களும் அதற்கு ஆதரவளித்தவா்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.