மாணவர் விசா மூலம் கனடா சென்றிருந்த 23 வயது இந்திய மாணவி வீடு ஒன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சிடிவி நியூஸ் செய்தியின்படி, கடந்த மே 15ஆம் தேதி நயாகரா பகுதியில் உள்ள லேக்ஷோர் சாலை மற்றும் லேக் தெரு பகுதிக்கு அருகில், இரண்டு பேர் உயிரற்ற நிலையில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டிற்குள் 23 வயது விதி மேகா இறந்து கிடப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செயின்ட் கேத்தரின்ஸைச் சேர்ந்த ஜோஷுவா செயின்ட் ஓமர்(40) மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியதாக சிடிவி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நயாகரா பகுதியில் இந்திய மாணவி விதி மேகா உயிரிழந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாணவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து ஆதரவையும் உதவிகளையும் குடும்பத்தினருக்கு வழங்கி வருகிறது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
Summary
A 23-year-old woman from India, who came to Canada on a student visa, was found dead earlier this month inside a home in Niagara Region.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிஜ்ஜாா் கொலை: இந்திய அரசுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை - கனடா காவல் துறை

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy




