ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து: பஞ்சாப் அரசை காப்பியடித்த தில்லி; கேஜரிவால்

நீட் தேர்வர்களுக்கான இலவசப் பேருந்துப் பயண அறிவிப்பு விவகாரத்தில் பஞ்சாப் அரசை தில்லி அரசு காப்பியடித்துள்ளதாக ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

அரவிந்த் கேஜரிவால் - படம் - ஏஎன்ஐ

Updated On :29 மே 2026, 8:43 pm IST

நீட் தேர்வர்களுக்கான இலவசப் பேருந்துப் பயண அறிவிப்பு விவகாரத்தில் பஞ்சாப் அரசை தில்லி அரசு காப்பியடித்துள்ளதாக ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "பஞ்சாப் அரசுக்கு அடுத்தபடியாக, இப்போது தில்லி அரசும் நீட் மாணவர்களுக்குப் பேருந்துப் பயணங்களை இலவசமாக்கியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நாடு முடுவதும் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததாக புகார்கள் வந்தன.

இதனையடுத்து, அந்தப் புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று என்டிஏ உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர்கள் என பத்துக்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் தில்லியில் நீட் மறுதேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் அனுமதிக்கப்படும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

AAP national convenor Arvind Kejriwal on Friday claimed that the Delhi government has announced free bus rides for NEET candidates after a similar move by the Punjab government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.