தில்லியில் நீட் மறுதேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் அனுமதிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் ரேகா குப்தா வெள்ளிக் கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நாடு முடுவதும் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, அந்தப் புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று என்டிஏ உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர்கள் என பத்துக்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், தில்லி முதல்வர் ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:
நீட் மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், தேர்வு நாளன்று, தில்லியில் உள்ள அனைத்து டி.டி.சி பேருந்துகளில் சரியான நுழைவுச் சீட்டைக் காண்பித்து மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.
மாணவர்களுக்கு மிக முக்கியமான நாளான அன்று (ஜூன் 21) அவர்கள் எந்தவித சிரமத்துக்கும் உள்ளாகக் கூடாது. அனைத்து நீட் தேர்வர்களுக்கும் எனது வாழ்த்துகள். உங்களின் கடின உழைப்பும், உறுதியும் வெற்றிக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Delhi CM Rekha Gupta announced on Friday that free bus travel will be permitted for all students appearing for the NEET re-examination in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










