ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

நீட் தேர்வுக் கட்டணம் திருப்பி அளிப்பு: வங்கி விவரங்களைப் புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

நீட் தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பதற்கான நடைமுறையில் வங்கி விவரங்களைப் புதுப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது குறித்து...

News image

வங்கி விவரங்களைப் புதுப்பிக்க கூடுதல் அவகாசம் - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 11:51 am IST

நீட் தீர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பதற்கான நடைமுறையில் வங்கி விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 22 ஆம் தேதி வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

கடந்த மே 3 ஆம் தேதி நாடு முடுவதும் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, அந்தப் புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று என்டிஏ உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர்கள் என பத்துக்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் ஏற்கெனவே செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்பட்டும் என்றும் என்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை மிகச் சரியாகப் புதுப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான கால அவகாசம், மே 22 முதல் மே 26 வரை உள்ளதாகவும் என்டிஏ தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய தேர்வில் இதுவரை, 13 லட்சம் மாணவர்கள் மட்டுமே தங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றியுள்ளதால், அதைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 22 ஆம் தேதி வரை நீட்டித்து என்டிஏ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆகவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீதமுள்ள மாணவர்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Summary

The National Testing Agency (NTA) has announced an extension of the deadline to update bank details for the NEET fee refund process until June 22.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.