கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!

நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்!

நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

NEET Exam

கோப்புப்படம் - ANI

Published On :12 மே 2026, 1:21 pm IST

நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் ஏற்கெனவே ராஜஸ்தானில் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை விசாரித்த ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு, மே 3 அன்று நடைபெற்ற தேர்வில் இடம்பெற்றிருந்த கேள்விகளைப் போலவே சுமார் 140 கேள்விகள் இடம் பெற்றிருந்த கைகளால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாளை கைப்பற்றினர்.

இந்த நிலையில், மே 3 அன்று நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இதனிடையே, மறுதேர்வு நடத்தப்படும் என்றும், விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ”2026 மே மாதத் தேர்வுக்காக மாணவ, மாணவிகளால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதிநிலை மற்றும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் உள்ளிட்டவை மறுதேர்வுக்கு அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை.

கூடுதல் தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணங்கள் அவர்களுக்குத் திருப்பியளிக்கப்படும். தேசிய தேர்வு முகமையின் நிதியைப் பயன்படுத்தி மறுதேர்வு நடத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

No fee for the NEET re-exam! fees already paid will also be refunded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.