அமெரிக்காவில் பெண் தோழியைக் கொலை செய்த குற்றத்துக்காக, 20 வயது இந்திய மாணவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அரிஸோனா மாகாத்தில், தன்னுடைய 19 வயது அமெரிக்க பெண் தோழியைக் கொலை செய்துவிட்டு, ஜெர்மனி தப்பிச் சென்ற வருண் பட்சிகாரி (20), ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தப்பி வர முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அரிஸோனா பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அனலிடிக்ஸ் படித்து வந்த வருண், ஆகஸ்ட் 6ஆம் தேதி பெண் தோழி ரூபியை கொலை செய்தார்.
அன்று மாலை 4 மணிக்கு காவல்துறைக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது, சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, ரூபி, படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார். அவரது நண்பர் வருண்தான் கொலையை செய்திருப்பது தெரிய வந்தது.
ரூபியைக் கொலை செய்த வருண், அவரது செல்போன் மூலம், அவளுடைய பெற்றோருக்கு, தான் குற்றமற்றவர், நிரபராதி என்பது போன்ற செய்திகளை அனுப்பியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், காவல்துறைக்கு தொடர்பு கொண்டு, பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கோரிக்கை வைத்தபோதுதான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
முதற்கட்ட விசாரணையில், அமெரிக்காவிலிருந்து அவர் ஹுஸ்டன் சென்று அங்கிருந்து ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பெர்லினிலிருந்து அவர் டக்சான் சர்வதேச விமான நிலையம் வந்து, அங்கிருந்து இந்தியா புறப்படும் விமானத்தில் ஏறவிருந்த போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இவர் மீது ஏராளமான வன்முறை குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ரூபியின் அறைக்கு அருகே தங்கியிருந்தவர்கள் அவரது படுக்கையறையிலிருந்து அலறல் சப்தம் கேட்டதாகவும், பின்னர் அவர் நலமாக இருக்கிறாரா என்பதை அறிய அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பயந்தது போல இல்லாமல், தான் நலமாக இருப்பதாகவும், அந்த சப்தம் ஒரு வாக்குவாதத்தால் ஏற்பட்டது என்றும் ரூபி பதிலளித்ததாகவும் சில இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிறகுதான், அந்த குறுந்தகவல்களை வருண் அனுப்பியிருந்தது தெரிய வந்தது.
வருணுடன் பழங்கி வந்த நிலையில், நட்புறவை முறித்துக்கொள்ள ரூபி திட்டமிட்டிருந்ததும், அது தொடர்பான வாக்குவாதத்தில் கொலை நடந்திருப்பதாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அரிஸோனா பல்கலைக்கழகத்தில் 'பிசினஸ் அனலிட்டிக்ஸ்' படித்து வந்த நிலையில், பல்கலைக்குள் அவர் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் வேலையை இழந்ததால், அவரால் வீட்டு வாடகையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் அவரது விசா ரத்தாகும் சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Indian student arrested in case involving the killing of American female friend!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வகுப்பைப் புறக்கணித்து பள்ளி சுவர் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலி

உ.பி. முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைது

கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்!

மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!




