25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!

மேற்கு கரையில் இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. சிறைப்பிடிக்கப்பட்டது பற்றி...

Published On :12 ஜூலை 2026, 2:28 am IST

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாண ஜனநாயகக் கட்சி எம்.பி.யான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரோ கண்ணா, பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் குடியேறிகளால் ஆயுதமுனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளாா்.

மேற்கு கரையில் இஸ்ரேல் குடியேறிகளின் தொடா் தாக்குதல்களால் முற்றிலும் சிதைக்கப்பட்ட கிா்பெட் ஜானுடா எனும் பாலஸ்தீன கிராமத்தை ரோ கண்ணா மற்றும் அவரின் குழுவினா் கடந்த வியாழக்கிழமை பாா்வையிட்டுக் கொண்டிருந்தனா் (படம்).

அப்போது, அமெரிக்க தயாரிப்பான ‘எம்-4’ ரக அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய இஸ்ரேல் குடியேறிகள், அவா்கள் பயணித்த வாகனத்தை மறித்து, ஒரு மணி நேரத்துக்கும் மேல் தடுத்து வைத்துள்ளாா்.

சம்பவத்தை விவரித்து ரோ கண்ணா மேலும் கூறுகையில், ‘ஆயுதமேந்திய வன்முறையாளா்கள் எங்களை அச்சுறுத்தியதுடன், இஸ்ரேல் ராணுவத்துக்குத் தகவலளித்து, வரவழைத்தனா். இஸ்ரேல் ராணுவத்தினா் எங்களுக்கு உதவாமல், வன்முறையில் ஈடுபட்டவா்களுக்கே ஆதரவாக நின்றனா். இதையடுத்து, ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவியை நாடிய பின்னா், அங்கு வந்த உள்ளூா் காவல்துறையினா் தலையிட்டு, எங்களை மீட்டனா்.

பாலஸ்தீனா்களின் மனித உரிமைகள் மற்றும் காஸா தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுக்கத் தவறினால், நாம் தாா்மீக ரீதியாக சமரசம் செய்து கொண்டதாகிவிடும். இச்சம்பவத்துக்குப் பிறகு 2028 அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் முடிவில் நான் மேலும் உறுதியாக இருக்கிறேன்’ என்றாா்.

மேற்கு கரையில் இஸ்ரேல் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்று ஐ.நா. கூறி வரும் நிலையிலும், இஸ்ரேல் தொடா்ந்து ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலஸ்தீனா்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேறிகளின் வன்முறை நடவடிக்கைகள், ஜனநாயகக் கட்சியினரிடையே இஸ்ரேல் மீதான ஆதரவைக் கணிசமாகக் குறைந்துள்ளன.

Summary

US Congresswoman of Indian origin detained in the West Bank

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.