முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் கைது!

2022-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் இருவரை கைது செய்தது பற்றி..

News image

கைது - file photo

Updated On :24 ஜூன் 2026, 1:51 pm IST

மேற்கு வங்கத்தில் 2022-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.

ஹவுரா (ஊரகப் பகுதி) மாவட்டத்தின் அம்டா பகுதியைச் சேர்ந்த அஸ்ஃபார் மித்யா மற்றும் என்டாஜுல் மித்யா ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு இவர்கள் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் அம்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திரபூர் பஜார் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். உள்ளூர் காவல்துறையிடமிருந்து இந்த வழக்கு என்.ஐ.ஏ. அமைப்பிடம் ஏப்ரல் 2024-ல் சென்றது.

குண்டு தயாரிப்பு நடவடிக்கைகளை அஸ்ஃபார் மற்றும் என்டாஜுல் ஆகியோர் கட்டுப்படுத்தி வந்ததையும், அப்பகுதி மக்களை அச்சுறுத்தி பயத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டதையும் புலனாய்வில் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் இவ்வழக்கில், முன்னதாகவே நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மேலும் இருவரை என்ஐஏ கைது செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.