உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற 'கன்வார் யாத்திரை' நிகழ்வில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மீரட்டின் மோடிபுரம் பகுதியில் முதல்வர் பங்கேற்ற நிகழ்வின்போது ட்ரோன் ஒன்று பறப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார் அந்த ட்ரோனைக் கண்டறிந்து, அதை இயக்கியவரைக் கைது செய்தனர். அந்தச் சாதனத்தையும் பறிமுதல் செய்தனர்.
நிகழ்விடத்தில் அனுமதியற்ற ட்ரோன் தென்பட்டதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தத் தொடங்கினர். ட்ரோனைப் பறக்கவிடுபவர் உடனடியாகக அதை கீழே இறக்குமாறு பொது ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டது.
அதன்பின் சிறிது நேரத்திலேயே அந்த ட்ரோன் கீழே இறக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில் அந்த இளைஞர், வலைப்பதிவு செய்வது தனது பொழுதுபோக்கு என்றும், முதல்வரின் நிகழ்ச்சி மற்றும் கன்வார் யாத்திரை போன்ற நிகழ்வுகளைப் பதிவு செய்ய விரும்பியதாகவும் கூறினார்.
மேலும் ட்ரோன் செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகள் குறித்து தனக்குத் தெரியாது என்று அவர் கூறியதாக அதிகாரி தெரிவித்தார். இளைஞரின் சமூக ஊடகப் பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்ததும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர் 'மெடிக்கல்' காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
A youth was detained in Meerut for causing a potential security scare by flying a drone without permission during an event where Chief Minister Yogi Adityanath was showering flower petals on Kanwariyas, a senior police official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

சோனம் பாஜ்வா என நினைத்து சிஜேபி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்! வைரலாகும் விடியோ!

உ.பி. டூ தமிழ்நாடு... முதல்வர் விஜய் தளபதியை சந்திக்க 24 வயது இளைஞர் நடைப்பயணம்!

முதல்வர் மாநில இளைஞர் விருது: ஜூலை 13 வரை விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி




