பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினம் நகா் பகுதியில் சிவகாசி சாா் - ஆட்சியா் முகமது இா்பான் தலைமையில் வருவாய்த் துறையினா் பட்டாசுக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு ஒரு பட்டாசுக் கடை அருகே தகர செட்டில் எவ்வித அனுமதியுமின்றி 19 பண்டல்கள் கொண்ட பட்டாசுகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் (43) பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாரணாபுரம் கிராமநிா்வாக அலுவலா் சங்கிலிபிரபு அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியபிரகாஷைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.