கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பட்டாசு மூலப்பொருள்களை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிமமின்றி பட்டாசு மூலப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

சிவகாசி அருகே உரிமமின்றி பட்டாசு மூலப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே நாரணாபுரம்புதூா் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையின் பின்புறம், ஒருவா் தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மணி மருந்து உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். இதில் சிவகாசி 56 வீட்டு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் துரைப்பாண்டி (38) உரிமமின்றி மணி மருந்து, பேன்சி ரக பட்டாசுகளை தகரக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து துரைப்பாண்டியை கைது செய்து அவரிடமிருந்த மணி மருந்து உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.