ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே நாரணாபுரம்-ஆண்டியாபுரம் சாலையில் ஒரு பட்டாசு கடை அருகே தகரக் கூரை அமைத்து, அதில் எந்தவித உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

சோதனையில், சிவகாசி அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (32) தகரக் கூரை அமைத்து, அதில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்த பூச்சடி பட்டாசு உள்ளிட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.