தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே அனுமதியுமின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

சிவகாசி அருகே அனுமதியுமின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு 1,080 பண்டல்கள் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், சிவகாசி அய்யனாா் குடியிருப்பைச் சோ்ந்த பாலகுருசாமி மகன் திருப்பதி (27), ஆனைக்குட்டம்

கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (32) ஆகியோா் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.