FOLLOW US

ON GOOGLE DISCOVER

தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சோனம் பாஜ்வா என நினைத்து சிஜேபி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்! வைரலாகும் விடியோ!

சோனம் வாங்சுக் - சோனம் பாஜ்வா, வித்தியாசம் தெரியாமல் சிஜேபி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் குறித்து...

News image

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தவறுதலாக பங்கேற்ற இளைஞர் / சோனம் பாஜ்வா

Updated On :21 ஜூலை 2026, 10:08 pm IST

தில்லி ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக்கை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், அது சோனம் பஜ்வா தலைமையிலான போராட்டம் என தவறான நினைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் இளைஞர் ஒருவர் பங்கேற்றுள்ளார்.

சோனம் வாங்சுக் அறிவியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் எனக் கூறிய பிறகும், அவர் குறித்து தெரியாது என்றும் சோனம் பாஜ்வாவை போராட்டத்தைக் கைவிடுமாறு கூறுவதற்காக இங்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் உடனான அந்த இளைஞரின் உரையாடல் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 20ஆம் நாளில் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஜூலை 21) 24வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடுத்தனர். பெண்கள் உள்பட சிறுமிகளின் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி மற்றும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்றுவரும் தில்லி ஜந்தர் மந்தர் திடலில் இளைஞர் ஒருவர் தவறுதலாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை, சோனம் பாஜ்வா போராட்டம் என நினைத்துக்கொண்டு ஜந்தர் மந்தருக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இங்கு வேறு ஒருவரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சோனம் வாங்சுக் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் குறித்து தெரியாது எனவும் குறிப்பிட்ட்டுள்ளார்.

ஜந்தர் மந்தர் திடலில் சோனம் வாங்சுக் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட இந்த விடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

cockroach janata party protest Young man participates in CJP protest thinking it was Sonam Bajwa Video goes viral!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.