கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் கேரளம் வருகை

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் திடீர் கேரளம் வருகைப் பற்றி....

Trump's son-in-law Michael Boulos arrives in Kochi for private visit

கேரளத்தில் டிரம்ப்பின் மருமகன்.

Published On :

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் மைக்கேல் பவ்லோஸ் தனிப்பட்ட பயணமாக சனிக்கிழமை கொச்சி வந்தடைந்தார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

அவருடன் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரும் உடன் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பூலோஸின் பயணத்திட்டம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எனினும், அவர், தனது பயணத்தின் போது கொச்சி மற்றும் அதையொட்டியுள்ள ஆலப்புழாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக்கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கேரள முதல்வர் வி.டி. சதீசனுடன் பவ்லோஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக சில ஊடகச் செய்திகள் வெளியாயின.

ஆனால் முதல்வர் அலுவலகம் இந்தச் செய்திகளை மறுத்துள்ளது. முதல்வர் சதீசன் அமெரிக்கத் தூதருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இது ஒரு அதிகாரப்பூர்வ சந்திப்பு என்றும் இதுதொடர்பாக வெளியான மற்ற செய்திகள் தவறானவை என்றும் அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: "மைக்கேல் பவ்லோஸ், தூதர் கோருடன் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நண்பராக இருந்து வருகிறார்.

தனது நண்பரைப் பார்ப்பதற்காக அவர் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.

அவர் எந்தவொரு அதிகாரப்பூர்வப் பயணமாகவும் இங்கு வரவில்லை. முற்றிலும் தனது தனிப்பட்ட முறையிலேயே வந்துள்ளார்." டிரம்ப்பின் மகள் டிஃபானியை மணந்துள்ள பவ்லோஸ், ஒரு தொழிலதிபரும் ஆவார்.

Summary

US President Donald Trump's son-in-law Michael Boulos arrived in Kochi for a private visit on Saturday, official sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.