முதல்வர் ச. ஜோசப் விஜய் கூட்டும் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 எம்பிக்கள் புறக்கணித்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.
நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற சூழலில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்பிக்கள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களின் ஆதரவுடன் மசோதாவைத் தாக்கல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தேர்தலில் முன்னதாகவே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தத் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழ்நாடு எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முதல்வர் விஜய்யின் அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.க்கள் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் இன்று (ஆக. 8) மதியம் தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் புறக்கணித்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 57 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி மற்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திமுகவின் மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, செல்வம், எஸ். ஜெகத்ரட்சகன், டி.எம். கதிர் ஆனந்த், அ. மணி, சி.என். அண்ணாதுரை, எம்.எஸ். தரணிவேந்தன், டி. மலையரசன், டி.எம். செல்வகணபதி, வி.எஸ். மாதேஸ்வரன், கே.இ. பிரகாஷ், ஆ. ராசா, அருண் நேரு, எஸ். முரசொலி, கணபதி பி. ராஜ்குமார், கே. ஈஸ்வரசாமி, ராணி, தங்க தமிழ்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, பி. வில்சன், ராஜேஷ்குமார், எஸ். கல்யாணசுந்தரம், ஆர். கிரிராஜன், ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் உள்ளிட்டோரும், அதிமுக எம்பிக்கள் மு. தம்பிதுரை, ஐ. எஸ். இன்பதுரை, ஆர். தர்மர் ஆகியோரும், அமெரிக்கா சென்றுள்ளதால் மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும், பாமகவின் அன்புமணி, தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி-க்களும் விசிக - 2, இந்திய கம்யூ - 2, மார்க். கம்யூ - 2, மதிமுக, ஐயுஎம்எல் தலா ஒரு என எம்.பி. மொத்தமாக 20 எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதால் காங்கிரஸ் எம்பி சுதா இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், கம்யூனிஸ்ட்டின் சு.வெங்கடேசன், சச்சிதாநந்தம், சுப்பராயன், செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நவாஸ் கனி, காங்கிரஸின் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில், பிரவீன் சக்கரவர்த்தி, ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், கோபிநாத், கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Summary
Thirty-seven MPs from Tamil Nadu have boycotted the all-party meeting of MPs convened by Chief Minister c. Joseph Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? திமுக பதில்

முதல்வர் விஜய் நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்! காரணம் என்ன?

தவெக அரசு நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி கேள்வி
அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுகவினர் கலந்துகொள்வார்களா? உதயநிதிக்கு நிர்மல் குமார் கேள்வி
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி



