பாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!முதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கை
/

முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள்!

முதல்வரின் தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் பங்கேற்பு குறித்து...

News image

முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் - PTI

Updated On :8 ஆகஸ்ட் 2026, 4:07 pm IST

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். தமிழகத்துக்கு 39 மக்களவை உறுப்பினர்களும், 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

ஆனால், திமுகவின் 30 எம்.பி.க்களும், அதிமுகவின் 4 எம்.பி.க்களும், பாமக, தேமுதிக, மநீம கட்சிகளின் தலா ஒரு எம்.பி.யும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இருப்பினும், தவெகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், திருமாவளவன், சு. வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், சசிகாந்த் செந்தில், ரவிக்குமார், துரை வைகோ, நவாஸ் கனி, ஜோதிமணி, சச்சிதானந்தம், செல்வராஜ், விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், பிரவீண் சக்ரவர்த்தி, செல்வராஜ், கே. சுப்புராயன், கோபிநாத், கிறிஸ்டோபர் திலக், விஷ்ணு பிரசாத் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரமும், தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் எம்.பி. சுதா கர்நாடகத்தில் இருப்பதால், அவரைத் தவிர்த்து காங்கிரஸ் கட்சியின் 19 எம்.பி.க்களும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Summary

Delimitation: MPs participated in the all-party meeting led by CM Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.