ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தமிழ்நாட்டின் நலனை விரும்புபவர்களே எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்! காங்கிரஸ்

முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து மாணிக்கம் தாகூர் கூறியது பற்றி...

MK Stalin | Vijay | Edappadi Palaniswami

மு.க. ஸ்டாலின் | விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாட்டின் நலனை முதலிடத்தில் வைத்திருப்பவர்கள்தான் முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் முதல்வர் விஜய் இன்று அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுகவும் அதிமுகவும் பங்கேற்காது என அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து விட்டனர்.

இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டின் நலனைவிட தங்களின் அரசியல்தான் முக்கியம் என இருப்பவர்கள்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவு செய்வார்கள்.

ஆனால், தமிழ்நாட்டை முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் தங்களின் அரசியலை வைத்திருப்பவர்கள் முதல்வர் அழைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இது கட்சி அரசியல் பற்றியது அல்ல. இது தமிழ்நாட்டின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றியது.

தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்து வருகின்றனர். மாநிலத்துக்கான முக்கியமான தருணத்தில் யார் உடனிருந்தார்கள் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

Summary

Tamilnadu people will remember who stood with Tamil Nadu when it mattered, says Congress Leader Manickam Tagore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.