உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்பதே மக்கள் எதிர்பார்ப்பு: அமைச்சர் அருண்ராஜ்

முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதத் துரதிருஷ்டவசமானது என அமைச்சர் அருண்ராஜ் கூறியது பற்றி...

News image

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 1:00 pm IST

முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதத் துரதிருஷ்டவசமானது என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது, "தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து கடந்தாண்டில் திமுகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில் தவெகவும் பங்கேற்று, திமுகவை ஆதரித்தது. மக்கள் இப்போதும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்க திமுக திட்டமிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. தொகுதி மறுவரையறை மட்டுமின்றி, மேக்கேதாட்டு, காவிரி விவகாரம் என அனைத்து விவகாரங்களிலும் நாங்கள் (தவெக) உறுதியாக நிற்கிறோம்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும்போது, நாம் அனைவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும்.

திமுக பல்வேறு காரணங்களால் மத்திய அரசுடன் பணிந்து போயிருக்கிறது. திமுகவின் ஒவ்வொரு அமைச்சர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவர்களின் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளிவந்தது அவர்களுக்கு ஒருவகையில் சந்தோஷம்தான். காங்கிரஸ் எப்போது விலகும், பாஜகவுடன் எப்போது கூட்டணி வைப்போம் என்றே திமுகவினர் இருந்தனர்.

இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களைத் தவிர்த்துவிட்டு, மாநில உரிமைகள் சார்ந்ததில் அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர். தமிழ்நாட்டின் நலனுக்குத் தேவையானவற்றைச் செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் கோருவோம்" என்று தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடத்த முதல்வர் இன்று அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக எம்.பி.க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து விட்டனர்.

Summary

People expect the DMK to participate in the MPs' meeting, says Minister Arunraaj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்