எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்றவர் எனக் கூறப்படும் பாபா வங்கா தெரிவித்த அதிர்ச்சியூட்டும் மூன்று கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான அவரது அச்சமூட்டும் கணிப்புகள் பற்றி மக்கள் மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா. சிறு வயதில் நேரிட்ட விபத்தில் பார்வையை இழந்த பாபா வங்காவுக்கு, எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் சக்தி கிடைத்ததாக நம்பப்படுகிறது.
அதாவது, 12 வயது சிறுமியாக இருந்த பாபா வங்கா, பார்வை இழந்த நிலையில், எதிர்காலத்தைப் பார்க்கும் அபூர்வ சக்தி கிடைத்ததாக அவரது தொண்டர்களால் நம்பப்பட்டார். அவரது 30வது வயதில் அவர் பெரும் புகழடைந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதையும் நேரடியாக வெளிப்படுத்தாமல், மறைமுகமான வார்த்தைகளைத் தொகுத்து அவர் தனக்கு தெரிந்த காட்சிகளை வெளிப்படுத்துவார். அதில்தான் இரண்டு உலோகப் பறவைகள் அமெரிக்க சகோதரர்கள் மீது மோதுகின்றன. அவ்விடம் சாம்பாலாக மாறுகிறது, மனித ரத்தம் ஆறாக பாய்கிறது என்று அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்து முன்கணித்திருந்தாராம்.
உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்கள் தலைதூக்கும், மனிதர் தொழிலாளர்களுக்கு மாற்று வரும் என்பது உள்ளிட்ட கணிப்புகள் ஏற்கனவே நிகழத் தொடங்கிவிட்ட நிலையில், மேலும் சில கணிப்புகள் மக்களை சற்று மனக்கலக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
அதாவது 2026-ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒரு பிரம்மாண்டமான விண்கலத்தின் வருகை பூமியில் நிகழும், மூன்றாம் உலகப் போர் தொடங்கும், ரஷியத் தலைமையின் வியத்தகு மாற்றம் ஆகியவை அவரது கணிப்புகளில் அடங்கும்.
2026ஆம் ஆண்டுக்குள் இதெல்லாம் நிகழும் என்று அவர் கணித்திருந்த நிலையில், இன்னும் 5 மாதங்களே இருக்கின்றன. அதிலும் ஒரு குறிப்புக்கு நவம்பர் மாதமே காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
1996ஆம் ஆண்டு மறைந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல், பிரின்ஸ் டயானா மறைவு, 2004ல் நிகழ்ந்த சுனாமி, கரோனா பேரிடர் உள்ளிட்டவற்றை சரியாகக் கணித்திருந்தார்.
அவரது கணிப்புகள் என்று வெளியாகும் எந்தவொரு தகவலும் எழுத்துப்பூர்வமாக எழுதி அவர் விட்டுச் செல்லவில்லை; அவருடன் இருந்தவர்களிடம் அவர் பரிமாறிக் கொண்ட தகவல்களைத் தொகுத்தே இந்த வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. சில கணிப்புகள் தவறாகும்போது, பாபா வங்காவின் கூற்றுகளைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
Summary
The time for Baba Vanga's predictions to come true is drawing near! What has she predicted for 2026?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தில்லி சட்டப்பேரவையில் மழைக்கால அமா்வு: பாஜக-ஆம் ஆத்மி இடையே கடும் வாக்குவாதம்

நாளைய மின் தடை

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி



