ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

கோவையில் கல்லூரி மாணவர் கொலை விவகாரம்: மாணவர்களின் அறைகளில் போலீஸ் திடீர் சோதனை!

கோவையில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் அறைகளில் போலீஸ் திடீர் சோதனை மேற்கொண்டது பற்றி...

Coimbatore college student murder case: Police conduct surprise search in students' rooms!

மாணவர்கள் அறையில் சோதனை செய்யும் போலீஸார்.

Published On :

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் அறைகளில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் கல்லூரி மாணவர் அமுதன், அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாக மாணவர்கள் இருந்துவிடக் கூடாது, என்பதற்காக அவர்கள் இந்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி அறிவுறுத்தலின்படி, போலீஸார் இத்தகைய செயல்களில், முனைப்புக் காட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளான, சூலூர், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, மதுக்கரை, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கல்லூரிக்கு வெளியில், அறை எடுத்துத் தங்கி இருக்கும் இடங்களை போலீஸார் கணக்கிட்டு, ஒவ்வொரு அறை, அறையாக உள்ளே சென்று மாணவர்கள் என்னென்ன பயன்படுத்துகிறார்கள், அவர்களின் உடமைகளில் என்னென்ன உள்ளது, சட்டவிரோதமாக மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு உள்ளாகி உள்ளார்களா? அவர்கள் ஏதேனும் போதை வஸ்துகளை பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்து தற்பொழுது சோதனை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என ஒரு குழுவாக, இணைந்து மாணவர்களின் ஒவ்வொரு அறை, அறையாக சென்று அவர்களின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் தற்பொழுது மாணவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், பெற்றோர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இத்தகைய செயல்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

Summary

In connection with the murder of a college student in Coimbatore, police conducted surprise searches in students' rooms across various areas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.