
மாணவர் தற்கொலைக்கு எதிராகப் போராட்டம்! மும்பை ஐஐடியில் தேர்வுகள் ஒத்திவைப்பு!
மும்பை ஐஐடியில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...

ஐஐடி மும்பை - கோப்புப் படம்
மும்பை ஐஐடியில் மாணவர் தற்கொலைக்கு எதிராகத் தொடரும் போராட்டத்தால் இடைத் தேர்வுகள் (மிட் செமஸ்டர்) ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மும்பை ஐஐடியில் சாஹில் வகோடே என்ற பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் கடந்த செப். 18 அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் தற்கொலைக்கு அவருக்கு சாதிரீதியான பாகுபாடுகள்தான் காரணம் என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சாஹில் வகோடேவின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மும்பை ஐஐடி நுழைவு வாயில் அருகே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வரும் செப்.26 மற்றும் செப்.27 ஆகிய தேதிகள் நடைபெறவிருந்த இடைத்தேர்வுகள் அக்.10 மற்றும் அக்.11 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இன்று (செப். 24) தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை மும்பை ஐஐடியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வர்ஷா கெயிக்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினரால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Mid-semester examinations at IIT Bombay have been postponed due to ongoing protests against a student's suicide.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





