ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் வாழ்த்து!

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி...

Prime Minister Narendra Modi.

பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப் படம்

Published On :

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நவீன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அவரது தலைமையின் கீழ் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை நிதின் நவீன் இன்று (ஆக. 17) வெளியிட்டார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேசிய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள். அத்துடன், கட்சியின் பிற பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

இந்த ஆற்றல்மிக்க குழு, பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்கும் அனுபவத்தை மட்டுமல்லாது, வலிமையான அடித்தளத்தையும் கொண்டுள்ளது. நமது இந்தத் தோழர்கள், முழு அர்ப்பணிப்புடன், மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதோடு கட்சியையும் வலுப்படுத்துவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Prime Minister Narendra Modi has extended his best wishes to the BJP's new national office bearers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.