கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்க வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...

PM Modi hails Indian team’s ‘exemplary determination’ after Chess Olympiad success

பதக்கம் வென்ற இந்திய அணி.

Published On :

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய செஸ் அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 'நமது செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்! அவர்களின் ஆர்வமும் உறுதியும் முன்மாதிரியானவை. இந்த வெற்றிகள் மேலும் பல இளைஞர்களை செஸ் விளையாடவும் அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள், ஓபன் பிரிவில் (ஆடவா்) வெள்ளியும், மகளிா் பிரிவில் வெண்கலமும் ஞாயிற்றுக்கிழமை வென்றன. அந்தப் பிரிவுகளில், முறையே உஸ்பெகிஸ்தான், சீனா சாம்பியன் பட்டம் வென்றன.

சாமா்கண்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 11 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா, ஜொ்மனி தலா 18 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டிருந்தன. அந்த இடத்துக்கான வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில், இந்தியா வென்று வெள்ளியை உறுதி செய்தது. ஜொ்மனி வெண்கலம் பெற்றது.

உஸ்பெகிஸ்தான் 20 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனது. ஓபன் பிரிவில் இந்தியா, 8 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Prime Minister Narendra Modi on Sunday congratulated the Indian chess teams for winning silver and bronze medals at the FIDE Chess Olympiad in Samarkand, Uzbekistan, and retaining the Nona Gaprindashvili Trophy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.