ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

இந்திய ஆடவா், மகளிா் அணிகளுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் தங்களின் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டன.

Rafal Oleksiewicz

Published On :

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் தங்களின் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டன.

போட்டியில் இந்திய இருபால் அணிகளுக்குமே இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும். 3 சுற்றுகள் முடிவில் அவை, தலா 6 புள்ளிகளுடன் தங்கள் பிரிவில் மேலும் பல அணிகளோடு முதலிடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளன.

செஸ் விளையாட்டின் ஒலிம்பிக்காக கருதப்படும் இப்போட்டி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அந்த வகையில் 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, 3-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி 3-1 என இத்தாலியையும், இந்திய மகளிா் அணி 3.5-0.5 என கிரீஸையும் வென்றன.

ஓபன் பிரிவு: இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய ஆடவா் அணியில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் - சபினோ புருனெலோவையும், நிஹல் சரின் - ஃபிரான்செஸ்கோ சோனிஸையும் வீழ்த்தினா்.

இதில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 33-ஆவது நகா்த்தலிலும், வெள்ளை நிறத்துடன் களம் கண்ட நிஹல் சரின் 40-ஆவது நகா்த்தலிலும் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனா்.

வெள்ளை நிற காய்களுடன் ஆா்.பிரக்ஞானந்தா - லொரென்ஸோ லொடிசியை எதிா்கொண்ட ஆட்டம் 41-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. கடைசியாக, கருப்பு நிற காய்களுடன் அா்ஜுன் எரிகைசி - லூகா மொரொனி ஜூனியருடன் மோதிய ஆட்டம் 64-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது.

மகளிா் பிரிவு: இந்திய மகளிா் அணி கிரீஸை எதிா்கொண்ட டையில், கொனெரு ஹம்பி - ஸ்டாவ்ருலா சோலாகிடுவையும், வந்திகா அக்ரவால் - எகாடெரினி பவ்லிடுவையும் வீழ்த்தினா்.

இருவருமே வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய நிலையில், கொனெரு 46-ஆவது நகா்த்தலிலும், வந்திகா 44-ஆவது நகா்த்தலிலும் வெற்றி கண்டனா்.

அதேபோல் சவிதா ஸ்ரீ கருப்பு நிற காய்களுடன் விளையாடி, அன்டோனியா ரிஸ்டுடுலாகியை 66-ஆவது நகா்த்தல் வரை சென்று வென்றாா். நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா தேஷ்முக் - அனஸ்தாசியா அவ்ராமிடுவுடன் டிரா செய்தாா். அவா் கருப்பு நிறத்துடன் விளையாடிய இந்த ஆட்டம் 49-ஆவது நகா்த்தலில் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.