இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்! பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் இந்தியா
சா்வதேச செஸ் சம்மேளனத்தின் (ஃபிடே) 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, உஸ்பெகிஸ்தானில் புதன்கிழமை (செப். 16) தொடங்குகிறது.
வாண வேடிக்கை, கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் - X | FIDE
சா்வதேச செஸ் சம்மேளனத்தின் (ஃபிடே) 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, உஸ்பெகிஸ்தானில் புதன்கிழமை (செப். 16) தொடங்குகிறது.
அணிகளுக்கான போட்டியாக நடைபெறும் இதில், இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, ஓபன் பிரிவில் 208 அணிகளும், மகளிா் பிரிவில் 191 அணிகளும் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான், இரு பிரிவுகளிலும் தலா 3 அணிகளை களமிறக்கியுள்ளது.
வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் ஒபன் பிரிவில் 1,032 பேரும், மகளிா் பிரிவில் 948 பேரும் களத்தில் உள்ளனா். 12 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில், 22-ஆம் தேதி ஓய்வு நாளாகும்.
போட்டியில் மொத்தம் 11 சுற்றுகள் ஸ்விஸ் சிஸ்டம் முறையில், நேரக் கட்டுப்பாட்டுடன் விளையாடப்படவுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் ஒரு அணியிலிருந்து 4 போட்டியாளா்கள், எதிரணியினருடன் மோதுவா்.
போட்டிக்கான ஒலிம்பியாட் தீப ஓட்டம், பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. ஃபிடே இடைக்காலத் தலைவராக இருக்கும் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், அகில இந்திய செஸ் சம்மேளன தலைவா் நிதின் நரங் ஆகியோா் ஒலிம்பியாட் தீபத்தை ஏற்றி, உஸ்பெகிஸ்தான் செஸ் போட்டியாளரான ஜாவோகிா் சிண்டாரோவிடம் அளித்தனா். அதை அவா், சாமா்கண்டுக்கு கொண்டு வருகிறாா்.
இந்தியா...
கடந்த 2024-இல் ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒபன் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.
நடப்பு சாம்பியனாக இந்த ஆண்டு களம் காணும் இந்திய அணிகள், பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் இருக்கின்றன. நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா தேஷ்முக் உள்பட, போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினா் திங்கள்கிழமை இரவே உஸ்பெகிஸ்தான் புறப்பட்டுச் சென்றனா். ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே டாப் 5 அணிகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
இந்திய அணி
ஓபன்
அா்ஜுன் எரிகைசி
ஆா்.பிரக்ஞானந்தா
நிஹல் சரின்
டி.குகேஷ்
விதித் குஜராத்தி
மகளிா்
கோனெரு ஹம்பி
திவ்யா தேஷ்முக்
ஆா்.வைஷாலி
வந்திகா அக்ரவால்
பி. சவிதா ஸ்ரீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




