பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

2-ஆவது சுற்றிலும் இந்திய மகளிர் அசத்தல்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி 3.5-0.5 என ஃபின்லாந்தை வியாழக்கிழமை வென்றது.

Divya Deshmukh

திவ்யா தேஷ்முக் - X | FIDE

Published On :

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி 3.5-0.5 என ஃபின்லாந்தை வியாழக்கிழமை வென்றது. ஆடவர் அணியும் 2.5-1.5 என இந்தோனேசியாவை வீழ்த்த, இந்தியாவின் இருபால் அணிகளுக்குமே தொடர்ந்து 2-ஆவது வெற்றி கிடைத்தது.

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் இந்தப் போட்டியில் 2-ஆவது நாளான வியாழக்கிழமை, மகளிர் பிரிவில் இந்தியா, ஃபின்லாந்தை எதிர்கொண்டது.

முதல் சுற்றில் ஓய்வில் இருந்த, நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா தேஷ்முக் இந்தச் சுற்றில் களம் கண்டார். அதில் அவர் ஜோஹனா பாசிகங்காûஸ வீழ்த்தினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 37-ஆவது நகர்த்தலில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வந்திகா அக்ரவால் - சாரா ஒலிவியா சிபோலாவையும், சவிதா ஸ்ரீ - ஹெல்ஜா லெடினெனையும் வீழ்த்தினர். இதில் வந்திகா கருப்பு நிற காய்களுடன் விளையாடி 22-ஆவது நகர்த்தலிலும், சவிதா வெள்ளை நிறத்துடன் களமாடி 30-ஆவது நகர்த்தலிலும் வென்றனர்.

முதல் சுற்றிலுமே இவர்கள் இருவரும் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆர்.வைஷாலி - கினானென் அனஸ்தாசியாவுடன் டிரா செய்தார். வைஷாலி கருப்பு நிற காய்களுடன் விளையாட, இந்த ஆட்டம் 88-ஆவது நகர்த்தலுடன் டிரா ஆனது.

ஓபன் பிரிவு: இந்தப் பிரிவில் களம் கண்ட இந்திய ஆடவர்களில், முதலில் விதித் குஜராத்தி - நாயகா போதிதர்மாவுடன் டிரா செய்தார். அவர் வெள்ளை நிற காய்களுடன் விளையாட, 34-ஆவது நகர்த்தலில், இருவரும் டிரா செய்தனர்.

2-ஆவது ஆட்டத்தில் நிஹல் சரின் - ஆரிஃப் அப்துல் ஹஃபிûஸ வீழ்த்தி, இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். வெள்ளை நிறத்துடன் விளையாடிய அவர், 37-ஆவது நகர்த்தலில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

3-ஆவது ஆட்டத்தில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் - சத்ரியா தத்தாவுடன், கருப்பு நிற காய்களோடு விளையாட, அந்த ஆட்டம் 51-ஆவது நகர்த்தலில் டிரா ஆனது. 4-ஆவது ஆட்டத்தில் ஆர்.பிரக்ஞானந்தா - சுசான்டோ மிகாரான்டோவுடன் டிரா செய்தார். அவர் கருப்பு நிற காய்களுடன் விளையாட, ஆட்டம் 79-ஆவது நகர்த்தலில் டிரா ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.