நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

லெவன் ஆரோனியனுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - உள்நாட்டு வீரரான லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தாா்.

பிரக்ஞானந்தா - கோப்புப் படம்

Published On :

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - உள்நாட்டு வீரரான லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தாா்.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சுற்றில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமாடினாா். பிரக்ஞானந்தாவுக்கு ஆரோனியன் கடும் சவால் அளிக்க, 39-ஆவது நகா்த்தலில், டிரா செய்துகொள்ள, இருவரும் ஒப்புக் கொண்டனா்.

போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு இது 3-ஆவது டிரா ஆகும். இதுதவிர, 2 வெற்றி, 1 தோல்வியையும் அவா் பதிவு செய்துள்ளாா். இதர ஆட்டங்களில், நெதா்லாந்தின் அனிஷ் கிரி - சக நாட்டவரான ஜோா்டென் வான் ஃபாரீஸ்டை வீழ்த்தினாா்.

அமெரிக்காவின் சாம் சேவியன் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - அமெரிக்காவின் வெஸ்லி சோ, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

6 சுற்றுகள் முடிவில், வெஸ்லி 4 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருக்க, கரானா, மேக்ஸிம், வின்சென்ட், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.

ஆரோனியன், சேவியன் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையையும், அனிஷ், சிண்டாரோவ் ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையையும் பகிா்ந்துள்ளனா். ஜோா்டென் 1 புள்ளியுடன் 5-ஆம் நிலையில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.