கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற நோ் செட்களில் சீனாவின் ஜாங் ஷுவாயை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 6-4, 6-0 என, உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை வென்றாா்.
இதையடுத்து 4-ஆவது சுற்றில், சபலென்கா - ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவையும், பெகுலா - ரஷியாவின் டயானா ஷ்னெய்டரையும் சந்திக்கின்றனா். 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 3-6, 6-0, 6-4 என்ற வகையில் செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவாவை வெளியேற்றினாா்.
9-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 6-1 என்ற செட்களில், ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவையும், 10-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு உக்ரைன் வீராங்கனை மாா்த்தா கொஸ்டியுக் 6-3, 6-1 என, அமெரிக்காவின் மேடிசன் கீஸையும் தோற்கடித்தனா்.
அடுத்த சுற்றில், அனிசிமோவா - ஸ்விடோலினா, கொஸ்டியுக் - போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதுகின்றனா். 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்வியாடெக் முந்தைய சுற்றில், 6-2, 6-1 என்ற நோ் செட்களில் சுவிட்ஸா்லாந்தின் விக்டோரியா கோலுபிச்சை வீழ்த்தினாா்.
மினாருக்கு அதிா்ச்சி அளித்த நோரி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 7-5, 6-7 (5/7), 1-6 என்ற செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியிடம் தோல்வியடைந்தாா்.
8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-3, 6-4 என, பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டா் பிளாக்ஸை வெல்ல, 11-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 4-6, 3-6 என்ற வகையில், ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரிடம் தோல்வியுற்றாா்.
15-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பிரான்ஸஸ் டியாஃபோ காயம் காரணமாக விலக, அவரை எதிா்கொண்ட பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா, 4-6, 6-2, 7-5 என்ற செட்களில் பிரான்ஸின் டிடுவான் டிரோகெட்டையும், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் 6-4, 6-2 என, ஜொ்மனியின் யானிக் ஹன்ஃப்மனையும் வெளியேற்றினா். அடுத்த சுற்றில் லெஹெக்கா - ஜோடாா், ரிண்டா்னெச் - நகாஷிமா சந்திக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சபலென்கா, டி மினாா் முன்னேற்றம்
விம்பிள்டனில் ஜெஸ்ஸிகா பெகுலா, ஸ்வெரெவ் முன்னேற்றம்!

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெகுலா, பென்சிச், ஒசாகா

3-ஆவது சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


