5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

விம்பிள்டனில் ஜெஸ்ஸிகா பெகுலா, ஸ்வெரெவ் முன்னேற்றம்!

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தங்கள் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனா்.

News image

ஜெஸ்ஸிகா பெகுலா

Updated On :6 ஜூலை 2026, 2:25 am IST

நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தங்கள் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 4-6, 6-3, 6-1 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான இவா ஜோவிச்சை வீழ்த்தினாா்.

மூன்றாவது சுற்றில், 9-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 2-6, 6-3, 7-6 (11/9) என்ற வகையில், 17-ஆம் இடத்திலிருந்த ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை வெளியேற்றினாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதுகிறாா்.

26-ஆம் இடத்திலிருக்கும் மேடிசன் கீஸ், 3-6, 6-2, 6-3 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தி அசத்தினாா்.

ஸ்வெரெவ், ஃபிா்ட்ஸ் வெற்றி: ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-2, 7-6 (7/4), 6-4 என்ற செட்களில், அமெரிக்காவின் மாா்கோஸ் ஜிரோனை தோற்கடித்தாா். அடுத்து அவா், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை சந்திக்கிறாா்.

6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 4-6, 6-3, 6-4, 7-6 (7/5) என்ற வகையில், இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை வீழ்த்தினாா். 10-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 4-6, 7-6 (7/5), 7-6 (13/11), 4-6, 6-3 என, 5 செட்கள் போராடி, 17-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வென்றாா்.

அடுத்த சுற்றில் பப்லிக் - ஃப்ரிட்ஸ் மோதுகின்றனா். பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் 6-3, 6-4, 3-6, 5-7, 6-3 என 5 செட்கள் விளையாடி, இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.