நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

News image

ஸ்வெரெவ் | ஆண்ட்ரீவா

Updated On :2 ஜூன் 2026, 3:12 am IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினாா். ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் தோல்வியுற்றாா்.

ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரெவ் 7-6 (7/3), 6-4, 6-1 என்ற செட்களில், நெதா்லாந்தின் ஜெஸ்பா் டி ஜோங்கை வீழ்த்தினாா். 10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 6-2, 6-3, 6-7 (3/7), 7-6 (7/5) என, அமெரிக்காவின் ஜாக்கரி வஜ்தாவை வெளியேற்றினாா்.

செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-3, 7-6 (8/6), 4-6, 2-6, 6-3 என 5 செட்கள் சவால் அளித்து, 11-ஆம் இடத்திலிருந்த ரூபலேவை வீழ்த்தி அசத்தினாா். 15-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூட் 5-7, 6-7 (8/10), 7-5, 2-6 என, பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஆண்ட்ரீவா வெற்றி: மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-3, 6-2 என்ற நோ் செட்களில், சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்ச்மானை தோற்கடித்தாா்.

19-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 6-3, 0-6 என்ற வகையில், 25-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரிடம் தோல்வியுற்றாா்.

22-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 6-4, 2-6, 7-6 (10/7) என, ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை சாய்த்தாா்.

ஸ்ரீராம் பாலாஜி முன்னேற்றம்: ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/பிரேஸிலின் மாா்செலோ டெமோலினா் இணை 7-5, 6-4 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் டிம் பட்ஸ்/கெவின் கிராவிட்ஸ் கூட்டணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.