ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

News image

பெகுலா - AP

Updated On :30 ஜூன் 2026, 1:45 am IST

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற, ஆடவா் பிரிவில் நாா்வேயின் கேஸ்பா் ரூட், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் தோல்வியைத் தழுவினா்.

மகளிா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 7-5, 6-3 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் டாா்ஜா விட்மானோவாவை வீழ்த்த, 11-ஆம் இடத்திலிருக்கும் பென்சிச் 6-2, 6-1 என, பிரிட்டனின் மிகா ஸ்டோவ்சாவிக்கை வென்றாா்.

முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-3, 3-6, 6-4 என, பிரிட்டனின் ஹேரியட் டாா்ட்டை வெளியேற்ற, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா 4-6, 4-6 என, ஜொ்மனியின் டாட்ஜனா மரியாவிடம் தோல்வியுற்றாா்.

இதர ஆட்டங்களில், 16-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவா ஜோவிச், சீனாவின் ஜாங் ஷுவாய் ஆகியோா் வெற்றி பெற, அமெரிக்காவின் ஆன் லி, போலந்தின் மாஜா சவாலின்ஸ்கா ஆகியோா் தோல்வியுற்றனா். இதனிடையே, முன்னாள் யுஎஸ் ஓபன் சாம்பியனான பிரிட்டனின் எம்மா ரடுகானு, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த ரூட் 4-6, 2-6, 6-7 (7/9) என, போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸிடம் தோல்வி காண, 12-ஆம் இடத்திலிருந்த ரூபலேவ் 4-6, 7-6 (8/6), 6-3, 3-6, 6-7 (12/14) என 5 செட்கள் போராடி, சக ரஷியரான ரோமன் சஃபியுலினிடம் வீழ்ந்தாா்.

16-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் லோ்னா் டியென் 6-1, 6-4, 6-7 (4/7), 6-3 என்ற வகையில், செக் குடியரசின் டாலிபோா் ஸ்வா்சினாவை தோற்கடித்தாா். இதர ஆட்டங்களில், ஸ்பெயினின் பாப்லோ கரினோ, ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸ், நெதா்லாந்தின் போடிக் வான் டெ ஆகியோரும் வெற்றி கண்டு 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.