தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூன் 29) தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:
''அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா ஆரோக்கியமானதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
எந்த பின்னணியில் இதனைச் செய்கிறார்கள் எனத் தெரியாது. அதிமுக உள்கட்சி விவகாரமாகவும் இதனைக் கடந்து செல்ல முடியவில்லை.
தமிழகத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். இதனை முன்பே தெளிவுபடுத்தியிருந்தேன். ஊடகங்கள் ஊகங்களாக செய்திகளைப் பரப்புகின்றன.
தவெகவுக்கு நாங்கள் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை; திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
என்எல்சி பங்குகளை விற்கும் முயற்சியை முதலில் கைவிட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மெல்ல மெல்ல தனியார் மயத்தை ஆதரிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.
Summary
Will not contest the by-election: Thirumavalavan speaks in Trichy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









