புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திமுக, அதிமுக பங்கேற்கவில்லை; ஆனால், இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்

திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள் என திருமாவளவன் பேசியது பற்றி...

DMK leader M.K. Stalin, VCK leader Thirumavalavan, AIADMK General Secretary Thirumavalavan

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பொதுச்செயலர் திருமாவளவன் - கோப்புப் படம்

Published On :

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள் என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சனிக்கிழமை (ஆக. 8) தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது.

இதனால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் குறித்து திருமாவளவன் பேசியதாவது:

ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளோம். தொகுதிகளுக்கான மறுவரையறையைக் கைவிட வேண்டும். இப்போதுள்ள எண்ணிக்கை 543 என்பது தொடர வேண்டும். மாநிலங்களுக்கான எண்ணிக்கையும் தொடர வேண்டும். அதாவது தமிழ்நாட்டில் 39 எம்.பி.க்கள் இருக்கிறோம் என்றால் இது இப்படியே தொடர வேண்டும். இந்த ஒரே கருத்து கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் 50 சதவிகிதம் உயர்த்தலாம் என்ற எண்ணமோ, மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்துவது என்ற நிலைப்பாடோ கூடாது என்பதுதான் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிற தீர்மானம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனடிப்படையில், கருத்துகளை முன்வைத்தோம்.

விசிக சார்பில் கூடுதலாக சில கருத்துகளையும் முன்வைத்தோம். மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் சமமான எண்ணிக்கையைக் கொண்டு வருவதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்கிற கருத்தையும் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல, தனித் தொகுதிகளுக்கான சுழற்சி முறையை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைமுறைப் படுத்துவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். சட்டப்பேரவையிலும் இந்தத் தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அமெரிக்காவில் நீண்ட காலமாக அதாவர்து 50 மாநிலங்கள் இணைக்கப்பட்ட பிறகும்கூட 13 மாநிலங்களாக இருந்தபோது, என்ன எண்ணிக்கை இருந்ததோ அதுதான் 100 ஆண்டுகளைக் கடந்தும் பின்பற்றப்படுகிறது. அதுதான் இந்தியாவுக்கும் பொருந்தும். எண்ணிக்கையைக் கூட்டுவதால் நாடாளுமன்றம் கேலிக் கூத்தாகிவிடும்.

திமுக அதிமுக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என திருமாவளவன் தெரிவித்தார்.

Summary

DMK and AIADMK did not participate, but they will adopt the same stance: Thirumavalavan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.