ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்தது என்ன? - மாணிக்கம் தாகூர் பேட்டி!

தொகுதி மறுவரையறை தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? என்பது பற்றி மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி...

Chief Minister Vijay / Tamil Nadu Congress President Manickam Tagore

முதல்வர் விஜய் / தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - (கோப்புப் படம்)

Published On :

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறு​வரையறை மசோதாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்சிப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற சூழலில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்பிக்கள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களின் ஆதரவுடன் மசோதாவைத் தாக்கல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோரும், காங்கிரஸ், விசிக, கம்யூ., ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், “தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் முன்னெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டு மணிநேரம் ஆலோசனை நடைபெற்றது.

கடந்த ஏப். 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்ததைப் போன்று மீண்டும் ஒற்றுமையாக இருந்து மறுசீரமைப்பு மசோதாவை தோற்கடிக்க தீர்மானித்துள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை 543 தொகுதிகளும், தமிழ்நாட்டிலிருந்து 39 தொகுதிகளையும் பாதுகாக்க வேண்டும், 50 சதவிகிதம் - 60 சதவிகிதம் கூட்டுவோம் என்றும் ஆஃபர் கதையெல்லாம் மத்திய பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த ஆஃபர்களுக்காக எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது.

இந்த ஆஃபர்களில் ஏமாற்றப்படும் கட்சிகள் வரலாற்றில் இருந்து மறக்கப்படமாட்டாது. முதல்வர் விஜய் எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். எங்களைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாட்டிற்கு எந்த துரோகமும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை.

தொகுதி மறுவரையறை மசோதா என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் சேர்ந்து செய்கிற சதி. தொகுதி மறுவரையறை என்பதே தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான திருட்டு வேலை. மோடியும் அமித் ஷாவும் தமிழ்நாட்டுக்கு ஃபேர் (fair) தொகுதி மறுவரையறையைக் கொடுக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஃபேக்- (fake) ஆன தொகுதி மறுவரையறை மட்டுமே அவர்கள் கொடுப்பார்கள்” என்றார்.

Summary

Tamil Nadu Congress State President Manickam Tagore has explained what was discussed at the all-party meeting regarding constituency delimitation, held under the leadership of Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.