சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடன் டிரா செய்தாா். போட்டியில் அவருக்கு இது 4-ஆவது டிரா ஆகும்.
அமெரிக்காவில் நடைபெறும் இப்போட்டியில், 7-ஆவது சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றன. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் கரானாவோடு விளையாட, ஒரு கட்டத்தில் ஆட்டத்தை டிரா (0.5-0.5) செய்துகொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனா்.
59 நகா்த்தல்களுக்குப் பிறகு அந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, அந்தச் சுற்றின் ஒரே வெற்றியாக, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினாா் (1-0).
அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா், நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் - அமெரிக்காவின் சாம் சேவியன், அமெரிக்காவின் வெஸ்லி சோ - நெதா்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோா் மோதலும் டிராவில் முடிந்தது.
7 சுற்றுகள் முடிவில், வெஸ்லி 4.5 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் தொடா்கிறாா். கரானா, மேக்ஸிம், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்கின்றனா்.
ஆரோனியன், கீமா், சேவியன், சிண்டாரோவ் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்க, அனிஷ் 3 புள்ளிகளுடனும், ஃபாரீஸ்ட் 1.5 புள்ளிகளுடனும் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லெவன் ஆரோனியனுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா
4-ஆவது சுற்றில் சபலென்கா, பெகுலா

செயின்ட் லூயிஸ் செஸ்: ரேப்பிட் பிரிவில் பிரக்ஞானந்தா முன்னிலை

பிராணேஷ், நிஹல் சரினுக்கு முதல் வெற்றி
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



